The bank sent the check back to the customer to provide the consumer court ordered compensation of Rs. 13 thousand
தகுந்த காரணமின்றி வங்கி காசோலை திருப்பி அனுப்பிய வழக்கில் ஆசிரியைக்கு ரூ.13 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மனைவி ஜெயந்தி. ஆண்டி குரும்பலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவர் வேப்பூரில் ஐ.ஓ.பி வங்கி கிளையில் கணக்கு வைத்து உள்ளார்.

இந்நிலையில், ஜெயந்தி தனக்கும், தனது மகனுக்கும் சேர்த்து எல்.ஐ.சி. நிறுவனத்தில் ஆயுள் காப்பீடுக்கான பிரிமீயத் தொகையை கடந்த 20-6-2011 ரூ.16 ஆயிரத்து 618-ஐ வங்கி காசோலையாக எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார்.

காசோலையை வேப்பூர் வங்கி கிளையில் எல்.ஐ.சி. நிறுவனத்தினர் செலுத்தியபோது, கையெழுத்து ஒத்து போகவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பி உள்னர். காசோலைய வங்கி திருப்பி அனுப்பியதால் சேவைக்கட்டணமாக கூடுதலாக ரூ.135-ஐ சேர்த்து ரொக்கமாக பிரிமீய தொகை செலுத்துமாறு எல்.ஐ.சி.யிடம் இருந்து ஜெயந்திக்கு அறிவிப்பு அனுப்பப் பட்டது. தனது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பணம் இருந்தும் காசோலை திருப்பி அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி இதுகுறித்து வேப்பூர் வங்கி கிளைக்கு சென்று விளக்கம் கேட்டார். ஆனால், வங்கி ஊழியர்கள் முறையான பதில் அளிக்காமல் அலைக் கழித்துள்ளனர்.

அதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை ஜெயந்தி, வங்கி கிளை மேலாளரிடம் இருந்து இழப்பீடு கேட்டு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 23-1-2012 அன்று வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை நீதிபதி கலியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

அதில், தகுந்த காரணங்கள் இல்லாமல் ஜெயந்தியின் காசோலையை, சம்பந்தப்பட்ட வங்கி திருப்பி அனுப்பியதால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் வங்கியின் சேவை குறைபாட்டால் அவர் பாதிப்பு அடைந்ததும் தெரியவருகிறது. எனவே அந்த வங்கி கிளை மேலாளர், 10 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவிற்காக உள்பட 3 ஆயிரம் என மொத்தம் 13 ஆயிரம் ஜெயந்திக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!