The big lake of Perambalur was full; Farmers sprinkle flowers welcome!
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையில், பச்சமலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில், பெரம்பலூரில் உள்ள மேல ஏரி எனப்படும் பெரிய ஏரி நேற்று இரவு நிரம்பி வழிந்தது. பாசன விவசாயிகள் பிரதிநிதிகள் நீர் நிலைக்கு பூஜைகள் செய்து மலர் தூவி புது வெள்ள நீரை வரவேற்றனர். கீத்து கடை குமார் பூக்கடை சரவனன் மற்றும் முன்னாள் அறங்காலவர் தெ.பெ.வைத்தீஸ்வரன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.