The board against the sale to the private sector, the electrical workers union demonstration in Perambalur
பெரம்பலூர் நான்கு ரோடு அருகே மின்வாரிய அலுவலகங்கள் முன்பாக, பெரம்பலூரில் மின் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம், நடத்தினர். மின் வாரியங்களை பிரிக்கக்கூடாது, மின் வாரியத்தை தனியாருக்கு விற்கக் கூடாது, மாநில அரசின் உரிமைகளை பறிக்க கூடாது, மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 வாபஸ் வாங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.