The boy arrested for sexually harassing a girl near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்த நாலரை வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.