The Brahma Rishi mountain near in Perambalur is 1008 m. Thread Make!

பெரம்பலூர், அருகே உள்ள எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் டிச. 10 ஆம் தேதி தீபத்திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திரி உள்ளிட்ட பூஜை பொருள்கள் தயாரிக்கும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், டிச. 10 கார்த்திகை தீபத்திருநாளில் மலை மேல் 1,008 மீட்டர் நீளமுள்ள திரி மற்றும் 3,000 கிலோ நெய், 50 கிலோ கற்பூரம் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

டிச. 10 கார்த்திகை தீபத்தன்று காலை 6 மணிக்கு கஜ பூஜை, கோ பூஜையும், 7 மணிக்கு 210 சித்தர்கள் யாகமும், காலை 10.30 மணிக்கு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து யானை மீது தீபம் ஏற்றும் செப்பு கொப்பரை வைத்து 63 நாயன்மார்கள் பஞ்சலோக சிலையுடன் சிவ பூதன வாத்தியங்களுடன் ஊர்வலம் நடைபெற உள்ளன.

மேலும், சிவனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதும் பிரம்மரிஷி மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மலை மேல் மாலை 6 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து, 6.15 மணியளவில் சாதுகளுக்கு வஸ்திர தானமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை பிரம்ம ரிஷி மலை அன்னை சித்தர் எஸ். ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில், தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் ஆகியோர் செய்து
வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!