The car collided near Perambalur and the accident happened: 4 people from Trichy survived by wearing a Seat belt.

பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு 20அடி ஆழ பள்ளத்தில் கார் விழுந்து விபத்திற்குள்ளானது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த நாசர் மகன் ஷாசில் (23) என்பவருக்கு சொந்தமான காரை அவரது நண்பர்கள் நான்கு பேர் காரை எடுத்து சென்றனர். கார், சென்னை ஏர்போர்ட்டிலிருந்து திருச்சி நோக்கி பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார் ஓட்டியர் கண்ணயர்ந்து தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த மாருதி ஸ்விப்ட் கார் எதிரே இருந்த ஆற்றுப் பாலத்தின் கட்டையின் மீது மோதி சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், சீட் பெல்ட் அனிந்திருந்ததால் காரில் பயணித்த திருச்சி சுப்பரமணியபுரத்தை சேர்ந்த நான்கு பேரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!