The case hit the jewelry shop: 2 Inspector, SI Commission on Human Rights to take action in order to warrant a fine of Rs 30 lakh

பெரம்பலூரில் நகை கடைக்காரரை தாக்கிய வழக்கில் 2 இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு எஸ்ஐக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் கடைவீதியை சேர்ந்தவர் சிங்காரம் மகன் செல்வராசு (52). இவர் அப்பகுதியில் நகை கடை வைத்து நகை வியாபாரம் மற்றும் நகை அடகு கடை தொழில்செய்து வருகிறார்.

கடந்த 20.10.2015ம்தேதியன்று செல்வராசு வழக்கம்போல் தனது கடையில் வியபாரம் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த கடைக்கு சென்ற ஒரு போலீஸ்காரர் காரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளார். உங்களை கூப்பிடுகிறார் என அழைத்துள்ளார்.

அப்போது அந்த காருக்கு சென்ற போது அந்த காரினுள் அமர்திருந்த திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன், அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ், எஸ்ஐ ராஜவேலு ஆகியோர் வலுக்கட்டாயமாக செல்வராசை போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்சென்று திருட்டு நகையை வாங்கியதாக கூறி அவரை தாக்கி அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் பணத்தை பெற்றுகொண்டு விடுவித்தனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராசு தன்னிடம் மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட 3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டராக மன்னர் மன்னன், நாகப்பட்டினம் மாவட்டம், கீழவேளூர் இன்ஸ்பெக்டராக சிவராஜ், அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் போலீஸ் எஸ்ஐயாக ராஜவேலு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி துரைஜெயச்சந்திரன் குற்றம் சட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேரும் மனித உரிமை மீறலில் ஈடுப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நகை கடைக்காரர் செல்வராசுக்கு அரசு இழப்பீடாக ரூ. 30 ஆயிரம் வழங்கவேண்டும். அந்த தொகையை குற்றம் சாட்டப்பட்ட போலீசார் அதிகாரிகள் 3 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் அபரதாரதமாக வசூல் செய்து வழங்கவேண்டும்.

மேலும் மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு எஸ்ஐ ஆகிய 3 பேர் மீது துறைரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவு காவல்துறையினர் மத்தியில் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!