The celebration of the 53rd anniversary celebrations at Namakkal Sri Ayyappan Temple: Special Pooja took place
நாமக்கல் ஸ்ரீஐயப்பன் கோவிலில் 53ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவில் 53ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் கடந்த 17ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
சபரிமலை ஸ்ரீ மாளிகைப்புரத்து மஞ்சமாதா கோவில் மேல்சாந்தி அனிஷ்நம்பூதிரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமிக்கு களபாபிசேகம் பூஜைகளை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். விழாவை முன்னிட்டு வருகிற டிச.2ம் தேதி கூலிப்பட்டி ஸ்ரீ பழனியாண்டவர் சுவாமிக்கு பாலாபிசேகம் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு மதியம் பக்தர்களுக்கு கூலிப்பட்டி கிருத்திகை சங்க கட்டிடத்தில் அன்னதானம் வழங்கப்படும். டிச.5ம் தேதி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் லட்சார்ச்சனை நடைபெறும், தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் பக்திப்பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். டிச.6ம் தேதிஇரவு 7.30 மணிக்கு சுந்தர வினோத் குழுவினரின் இசை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். 7ம் தேதி காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு பெற்று தீபாராதனை நடைபெறும்.
காலை 10 மணிக்கு நாமக்கல் அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் கோவிலுக்கு பால் குட ஊர்வலம் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு கோவை அரவிந்த் சுப்ரமணியத்தின் ஸ்ரீ ஐயப்பன் தத்துவம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடைபெறும். 8ம் தேதி காலை 7.30 மணி முதல் 1 மணிவரை ஸ்ரீ ஐயப்பனுக்கு 108 வலம்புரி சங்காபிசேகம், மகா அபிசேகம், மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
மாலை 5 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஊர்வலம் நடைபெறும். 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு நாமக்கல் கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு அன்னதானம் நடைபெறும். நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அருளரசு, அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைக்கின்றனர்.
டிச.27ம் தேதி காலை 7 மணி முதல் 11 மணிவரை மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு நெய் அபிசேகம் நடைபெறும். 1.30 மணிக்கு மகா அபிகேம் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். ஜன.14ம் தேதி திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ ஐயப்பசாமி திருக்கோவிலில்ல மகரஜோதி தரிசனம் நடைபெறும். திருக்கோவிலில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் பஜனை நடைபெற்ஸ்ரீறு பக்தர்களுக்கு பிரசாம் வழங்கப்படும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் குருமூவீஸ் மணி, துணைத்தலைவர் சென்னகேசவன், உதவி தலைவர் பழனியப்பன், செயலாளர் சபரி சின்னுசாமி, துணை செயலாளர் பாண்டியன், உதவி செயலாளர் ராமசுவாமி, பொருளாளர் ராஜகோபாலன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.