
The Central Government decided to change the names of the three islands in Andaman
அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தமான் – நிக்கோபர் கடல் பகுதியில் உள்ள ரோஸ், நையில் மற்றும் ஹேவ்லாக் ஆகிய தீவுகளின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளை பெரும்பாலும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நீல் தீவுக்கு ஷகீத் தீப் தீவு என்றும், ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் தீவ் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றியதன், 75வது ஆண்டை முன்னிட்டு, வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 150 மீட்டர் உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.