the Chennai-Trichy national highway near unidentified vehicle hit the deer, it dead Near by Perambalur : wildlife species will be extinct and to defend the state!
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு : அழிந்து கொண்டு இருக்கும் வன உயிரினங்களை காக்குமா அரசு!
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அழகிய பெண் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், பெரம்பலூர், குன்னம் ஆகிய நான்கு வட்டத்திலும் பல்வேறு கிராமங்களில் ஏராளமான வனக்காப்பு காடுகள் உள்ளது. இதில் மான், மயில், காட்டு பன்றி, முயல், குரங்கு, கரடி, உடும்பு, ஓநாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகிறது.
இந்நிலையில் வறட்சி காலங்களில் தண்ணீர் மற்றும் இறை தேடி ஊருக்குள் வரும் போது சமூக விரோதிகளாலும், சாலையை கடக்கும் போதும் வாகனங்கள் மோதியும் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை, பெரம்பலூர் அருகே உள்ள திருமாந்துறை பகுதியிலுள்ள சுங்கச்சாவடிக்கும், வி.களத்தூர் பிரிவு பாதைக்கும் இடையே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 3 வயது உள்ள அழகிய பெண் புள்ளி மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்து கிடந்தது.
இதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த புள்ளிமானை மீட்டு மருத்துவர் பரிசோதனைக்கு பின்னர் வன காப்பு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. விபத்தில் உயிரிழந்த புள்ளி மான் 6 மாத கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சாலையை கடக்க முயலும் வன விலங்குகள் காயமடைவதும், உயிரிழப்பதும் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கதையாகி வருவதால், பிரதான சாலையோரங்களிலுள்ள வனப்பகுதியில் வேலி அமைப்பதோடு, வனப்பகுதியில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகளையும் கட்டி தருவதோடு, விலங்குகளின் உணவுத் தேவையை வனப் பகுதியியேலயே பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதில் தாமதிக்க கூடாது என வன மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனனர்.