The civilians should not attack those involved in criminal activities: Perambalur Police Department Notice

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவது யாதெனில் தற்சமயம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் வடமாநிலங்களில் இருந்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் வந்து குழந்தைகளை கடத்துவது போன்றும், அவர்களை பொதுமக்கள் அடிப்பது போன்றும் செய்திகள் வெளியாகிறது.

ஆகையால் இது போன்று குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் என யாராவது சந்தேகப்படும் வகையில் தென்பட்டால் அவர்களை பற்றிய தகவல்களை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கோ அல்லது கீழ்காணும் தொலைபேசி எண்ணுக்கோ தகவல் தெரிவிக்க வெண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தங்கள் பகுதிகளில் யாரெனும் அரசுக்கு புறம்பாக மணல் கடத்துதலில் ஈடுபட்டாலொ, அல்லது அது சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றாலோ அது பற்றிய தகவல்களையும், அரசுக்கு புறம்பாக தங்கள் பகுதிகளில் யாரெனும் பான்மசாலா, குட்கா பொன்ற பொதை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது அல்லது விற்பனை செய்வது பற்றி தகவல் கிடைத்தாலோ அது சம்பந்தமாக தகவல்களையும் உடனழயாக அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கோ அல்லது சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வெண்டும்.

மாறாக குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை தாங்களே தாக்குவது பொன்ற விபரீத செயல்களில் ஈடுபட கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது போன்று செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட காவல் துறை
அறிவித்துள்ளது.

அவசர உதவி தொலைபெசி எண்.100 மற்றும் மாவட்ட காவல் அலுவலக தொலைபேசி எண்கள் 04328-224910, 04328-224962 என்ற எண்களில் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!