The Collector started a plastic contamination exhibition at Perambalur.
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த சட்டசபை கூட்ட தொடரில் சில குறிப்பிட்ட வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் மாணாக்கர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பெரம்பலூர் நகராட்சி இணைந்து பிளாஸ்டிக் மாசில்லா கண்காட்சியை பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நடத்தியது.
இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.சேரலாதன், நகராட்சி ஆணையர் வினோத், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவி பொறியாளர் ம.பிரபாகரன், வட்டாட்சியர் பாரதிவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.