The college student complained to the Namakkal Collector that he has been kept out of town for 25 years from Same Community

கோயில் பிரச்னை தொடர்பாக தனது தாத்தா காலத்தில் இருந்து தங்களது குடும்பத்தை 25 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கிவைத்திருப்பதாக கல்லூரி மாணவர் ஒருவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நெ.3 கொமாராபாளையம் அருகே பொன்பரப்பிப்பட்டி காலனியை சேர்ந்த ஆர்.லோகேஸ்வரன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்தி்டம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: ஆதிதிராவிட சமுதாயத்தை எங்கள் குடும்பத்தை, அதே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். எங்களது தாத்தா காலத்தில் கோயில் நி்ர்வாகம் தொடர்பான பிரச்னையில், எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர்.

இதனால் கடந்த 25 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளோம். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை கோயிலில் வழிபட, கடைகளில் பொருட்கள் வாங்க, பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க அனுமதிப்பதில்லை. 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த காலனியில் எங்களுடன் பேசுபவர்களையும் ஊரை விட்டு
ஒதுக்கிவைத்துவிடுவோம் என சிலர் மிரட்டுகின்றனர்.

இதனால் தினமும் பல்வேறு அவமானங்களை சந்திக்க நேரிடுகிறது. கல்லூரியில் படிக்கும் நானும், சகோதரியும் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் எங்கள் குடும்பத்தை 25 ஆண்டுகளாக ஊரை ஒதுக்கிவைத்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய நபர்கள் மீது நடவடிக்கையெடுத்து, கிராமத்தில் இயல்பான வாழ்க்கை வாழ ஆட்சியர் உதவிட வேண்டும்.

Tags:

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!