the college student who claimed to Near In Perambalur the missing: the parents, compliants the police
பெரம்பலூர் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் போலீசில் மனு கொடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் மகள் பிரவீனா (வயது – 17), திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் B.Sc முதலாம் ஆண்டு படித்து வருகிறார்
இந்நிலையில் கடந்த 2ந்தேதி பிரவீனா கல்லூரிக்கு செல்வதாக தனது தந்தை பத்மநாபனிடம் கூறி விட்டு சென்று விட்டார் பின்னர் கல்லூரிக்கு சென்ற மகள் மாலை வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த பத்மநாபன் கல்லூரிக்கு போன் செய்து விசாரித்தார் ஆனால் பிரவீனா கல்லூரிக்கு வரவில்லை என்று தெரிவித்துவிட்டனர்
பின்னர் பல்வேறு இடங்களில் தேடியும் பிரவீனா கிடைக்காததால் பத்மநாபன் மங்களமேடு போலீசில் மகளை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்தார். வழக்கு பதிவு செய்த மங்களமேடு போலீசார் தீவிர தேடி வருகின்றனர்