The college student who threw away the baby she had given birth to as dead; Doctors rescued alive by police !!
பெரம்பலூர் அருகே பெற்ற குழந்தையை வீசி சென்ற கல்லூரி மாணவி, வயிற்றுவலி என மருத்துவமனைக்கு சிகிச்சை சென்ற போது, மருத்துவர்கள் குழந்தை பெற்றதை உறுதி செய்து போலீசார் மூலம் நள்ளிரவில், குழந்தையை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த வீராசாமி -ஷோபனா ஆகியோரமு மகள் காயத்திரி (20), இவர் நேற்றிரவு வயிற்று வலி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது சிசிச்சை அளித்த மருத்துவர்கள், காயத்திரி சுமார் 3 மணி நேரத்திற்கு குழந்தை பெற்றிருப்பதை உறுதி செய்தனர். கல்லூரி மாணவி காயத்திரி மற்றும் அவர் தயாரிடமும் தீவிரமாக நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. இது குறித்து மருத்துவர்கள் அங்கிருந்த மருத்துவமனை புறக்காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி மாணவி மற்றும் உறவினர்களை அழைத்து நடத்திய விசாரணையில், அந்த பெண், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டுஇளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். அதோடு, பகுதி நேரமாக தொட்டபெட்டா செல்லும், டீ எஸ்டேட் விற்பனை கடையில் பணிக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில், அங்கு எசனையை சேர்ந்த ராஜதுரை என்ற இளைஞரும், வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் நெருக்கமாக பழகி, காதல் செய்துள்ளனர். உல்லாசமாக இருந்ததால் காயத்ரி கர்ப்பாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சொந்த ஊருக்கு வந்து கல்லூரி உதவித் தொகையை வங்கியில் இருந்து எடுக்க வந்த நிலையில், நேற்றிரவு வெளியே சென்ற அந்த பெண்ணுக்கு, பிரசவம் ஆகி, பெண் குழந்தை பிறந்துள்ளது. அது இறந்து விட்டது என நினைத்து அந்த பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டு வீட்டிற்கு வந்து வயிறுவலிப்பதாக தாயிடம் தெரிவித்தன் பேரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது தெரியவந்தது, உடனடியாக காயத்திரி மற்றும் அவரது உறவினர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பார்த்த போது குழந்தை பாதுகாப்பாக உயிருடன் குளிரில் கிடந்தது, குழந்தையை பாதுகாப்பாக மீட்ட போலீசார், அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்து, இங்குபேட்டரில் வைத்தும், கல்லூரி மாணவி காயத்ரிக்கு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. பெற்ற குழந்தையை தாய் வீசி சென்ற நிலையில், மருத்துவர்களும், போலீசரும், விரைவாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றியதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் காதலன் ராஜதுரை பெரம்பலூருக்கு ஊட்டியில் இருந்து வந்து கொண்டு உள்ளார். திருமணம் ஆகாமலே குழந்தை பெற்றுக் கொள்ளும் தொடர் சம்பவங்கள் இளைய சமுதாயத்தின் சீர்கேட்டை எடுத்து சொல்லும் விதமாக உள்ளது.