The Communist Party is not close to being in this country: H. Raja’s accusation

இந்த நாட்டில் இருப்பதற்கே கம்யூனிஸ்ட் கட்சிக்கு அருகதை இல்லை என பா.ஜ.க தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. இயற்கை அளித்த கொடை மலைகள். இவற்றை குவாரிக்காக அழிப்பதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. பிரம்மரிஷி மலையை சிதைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு தடுக்க வேண்டும். இன்று தமிழகத்துக்கு மத்திய ஆய்வுக் குழு வந்துள்ளது. 5 நாள் இந்த குழு நேரில் ஆய்வு செய்ய உள்ளது. இந்த குழுவினர் 4 மாவட்டங்களில் 4 நாள் நேரில் ஆய்வு செய்துவிட்டு 5 வது நாள் சென்னையில் கூடி நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்வார்கள். அதன் பின்னர் தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும்.

கஜா புயலால் தமிழகத்தில் மிகப்பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது. பலரது வாழ்வாதாரம் 30 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது. கோடிக்கனக்கான தென்னை மரம் சாய்ந்துள்ளது. தென்னை மரம் ஒன்றுக்கு குறைந்தது ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். ஒரு லட்சம் மின் கம்பம் சாய்துள்ளது. மின்கம்பம் அமைத்து மின்சாரம் வழங்கும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்களின் செயல்பாடு அளப்பரியது. வீடுகளில் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணை மற்றும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அய்யப்பன்கோயில் விவகாரத்தில் மனநோயாளி மாதிரி பினராய் அரசு நடந்துக் கொள்கிறது. பினராய் அரசின் காலத்தின் நாட்கள் எண்ணப்படுகிறது. கேரளாவில் பினராய் அரசு இந்து விரோத மனப்பான்மையுடன் செயல்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியையும், அதற்கு ஆதரவளிப்பவர்களையும் அய்யப்ப பக்தர்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். கேரள பா.ஜ.க பொறுப்பாளரான நான் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அரபிக் கடலில் கரைக்காமல் விடமாட்டேன். அதற்கு ஆதரவளிக்கும் கட்சிகளையும் அரசியல் களத்திலிருந்து அழிக்க வேண்டும். இந்த நாட்டில் இருப்பதற்கே கம்யூனிஸ்ட் கட்சிக்கு அருகதை இல்லை.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக வங்கி மூலம் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி தொழில் தொடங்கப்
பட்டுள்ளது. தூய்மை பாரத திட்டத்தின் கீழ் 9 கோடி ஏழை மக்களுக்கு கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1 கோடியே 25 லட்சம் பேருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்ப்பட்டுள்ளது. 8 கோடி வீடுகளுக்கு சமையல் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சிதான் பேதம் பார்த்தது. ஆனால் பா.ஜ.க அப்படி செய்யவில்லை. பாஜக திட்டங்கள் அனைவரையும் சென்று சேருகிறது.

சிலை கடத்தல் தடுப்பு விவகாரத்தை நல்லவிதமாக விசாரித்து வரும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறேன். அதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என நினைக்கிறேன் என்றார். பேட்டியின் போது ராஜ்குமார் குருஜி, பாஜ தேசியபொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!