The Conference Meeting of the World Conference of the Tamil Conference Committee is held in Namakkal.
உலக கொங்கு தமிழர் மாநாட்டுக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்குவேளாள கவுண்டர்கள் பேரவை சார்பில் 2வது உலக கொங்கு தமிழர் மாநாடு வருகிற 2019ம் ஆண்டு பிப்.3ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது சம்மந்தமாக நாமக்கல் மாவட்ட கொமதேக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
மாநாட்டுக்குழு செயலாளர் மாதேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநாட்டுக்குழு தலைவர் ராகவேல் முன்னிலை வகித்தார். மாநாட்டு நிதிக்குழு தலைவர் சின்ராஜ், மாநில துணைப்பொது செயலாளர் தங்கவேல், மாநில விவசாய அணி இணை செயலாளர் சந்திரசேகர், புறநகர் மாவட்ட செயலாளர் பூபதி, மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் ராயல் செந்தில், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்திஉள்ளிட்ட மாநாட்டு குழு நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள். அகில இந்திய அளவில் பிரமாண்டமாக மாநாட்டை நடத்துவது என்றும் அதிக அளவில் மகளிரை கலந்துகொள்ளச் செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநாட்டு நிதிக்குழு, வரவேற்புக்குழு, மாநாட்டு திடல் குழு, விளம்பரக்குழு, சட்டக்குழு, விவசாய கண்காட்சிக் குழு, உணவுக்குழு, கமாண்டோ பாதுகாப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து அதற்கான நிர்வாகிகளை நியமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரளான கொமதேக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.