The Congress party demonstrated in Namakkal, denouncing Rafael Air Force Purchase Scandal
ரபேல் போர் விமான கொள்முதல் ஊழலை கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பார்க் ரோட்டில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக் நவீத் தலைமை வகித்தார்.
காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சுபசோமு, நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தனகோபால், முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், சுப்பிரமணியம், நாமக்கல் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கிழக்கு வினாயகமூர்த்தி, மேற்கு சதீஸ்குமார்,நகர காங்கிரஸ் துணைத்தலைவர் குப்புசாமி,வட்டார தலைவர்கள் இளங்கோ, குப்புசாமி, முரளி, ரங்கசாமி, நடராஜன், பேரூராட்சி தலைவர்கள் சிங்காரம், இளங்கோ, ராஜா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சோடாராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனைதொடர்ந்து நாமக்கல் கலெக்டரிடம் ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் குறித்து மனு அளிக்கப்பட்டது.