The court of the bank and the insurer who changed his wife name had to pay compensation
திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் மனுதார் ஐயப்பன் (வயது 47) நான்குநேரி கனரா வங்கியில் ஆட்டோ லோன் வாங்கியுள்ளார். ஆட்டோவுக்கு மனுதார் ஒப்புதல் இல்லாமல் (அனுமதியில்லாமல்) ரூபாய் 1323/- வங்கி கணக்கில் இருந்து எடுத்து APOLLO MUNICH HEALTH INSURANCE CO.Ltd நிறுவனம் மூலம் கனராவங்கி ஆட்டோவிற்கு காப்பீடு செய்துள்ளது.
மனுதார் ஐயப்பன் கனரா வங்கி கிளை மேலாளரிடம் தனது வங்கி கணக்கில் இருந்து 25.02.2016 ல் ரூபாய் 1323/- எடுக்கப்பட்டது குறித்து கேட்டுள்ளார். அதற்கு வங்கி கிளைமேலாளர் காப்பீடு தொகைக்கு பிடித்ததாக தெரிவித்துள்ளார். நுகர்வோரிடம் அனுமதியில்லாமல் வங்கி கணக்கில் பணம் எடுத்தது முறையற்ற வாணிபம் என மனுதார் தெரிவித்துள்ளார். மேலும் அசல் காப்பீடு பத்திரம் தரும் படி கேட்டுள்ளார்.
காப்பீடு பத்திரத்தை பார்த்த மனுதார் அதிர்ச்சியடைந்து விட்டார் அதில் நாமினியாக மனுதார் ஐயப்பன் மனைவி பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதை வங்கி கிளை மேலாளரிடம்,மற்றும் பொது மேலாளரிடம் தெரிவித்துள்ளார் அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் மன உளைச்சலான மனுதார் காப்பீட்டு நிறுவன பொது மேலாளரை தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட சேவைகுறைப்பாட்டை பற்றிய விபரத்தை தெரிவித்துள்ளார்..
மனுதாரின் கோரிக்கையை செவி மடுத்து காப்பீட்டு நிறுவன பொது மேலாளரும் கேட்கவில்லை என்பதால் மனுதார் வழக்கறிஞர் பிரம்மா மூலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்திரவில் மனுதாரிடம் அனுமதி பெறாமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது முறையற்ற வாணிபம் என்றும் காப்பீட்டு பத்திரத்தில் நாமினியாக மனுதார் மனைவியின் பெயரை தவறாக குறிப்பிட்டது (மனைவியையே மாற்றியது) சேவை குறைபாடு என்பதால் கனரா வங்கி கிளை மேலாளர், பொது மேலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவன பொது மேலாளர் ஆகியோர் சேர்ந்து மனுதார்க்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 5000/- வழக்கு செலவுக்கு ரூபாய் 3000/- சேர்த்து மொத்தம் ரூ. 8000/- ரூபாய் ஒரு மாதகாலத்தில் வழங்க வேண்டும் தவறினால் 6 சதவீத வட்டியுடன் வழங்கவும் உத்திரவு பிறப்பித்துள்ளார்.