The decision to close 3,000 primary schools should be abandoned: Teachers request
3 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள மூடும் முடிவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
அரியலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அச்சங்க மாநில பொது செயலாளர் ரெங்கராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தாவது:
15 மாணவர்களுக்கு கீழ் உள்ள 3 ஆயிரத்திற்க்கு மேல்பட்ட தொடக்கப்பள்ளிகளை மூடுகிற நிலையில் தமிழக அரசு ஈடுப்பட்டுகிறது. குறிப்பாக அந்த பள்ளிகளுக்கு கற்றல், கற்பித்தல் மானியம் வழங்கப்படாமல் உள்ளது. மற்ற பள்ளிகளுக்கு வழங்க அரசானை வெளியிடப்பட்டுள்ளது
இதனை பார்க்கும் போது மூடப்படும் நிலை தெரிகிறது. அதனை மூடாமல் பள்ளிகள் காக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஒரு நபர் குழுவில் இடை நிலை ஆசிரியர் ஊதியத்தை சரி வேண்டும் எனவும் இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.