The deer death, search for water near in Perambalur || தண்ணீர் தேடி அலைந்த புள்ளிமான்கள் சாவு
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக காப்பு காடுகளில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை தேடி அலைந்து திரிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பெரம்பலூர் நகருக்குள் தண்ணீர் அலைந்து திரிந்த புள்ளி மான் ஒன்று இன்று காலை புதிய மதனகோபாலபுரம் அருகே அவ்வழியே வந்த வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. மான் இறப்பதற்கு முன்னாள் இரு நாட்களாக அப்பகுதியினர் மானுடன் செல்பி எடுத்து உள்ளனர்.
இதே போன்று , நக்கசேலம் அருகே தண்ணீர் தேடி வந்த சுமார் 2 வயதுடைய மான் ஒன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மானின் உடல்களை மீட்டு, கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து மண்ணில் புதைத்தனர்.