The Dengue Fever Medical Camp started on behalf of DMK in Namakkal East

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் துவங்கியது.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பின் பேரில்,நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வுமுகாம், இலவச மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இன்றுகாலை நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் மற்றும்மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

மாநில திமுக நிர்வாகிகள் ராணி, நக்கீரன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், டாக்டர் பார்த்திபன், நகர பொறுப்பாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் பழனிவேல், ஈஸ்வரன், சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராணா ஆனந்த், சத்தியபாபு, மனோபாலாஜி உள்ளிட்ட திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து காலை 9 மணிக்கு நாமக்கல் – திருச்சி ரோட்டில் ஆண்டவர் பெட்ரோல் அருகில் இந்த முகாம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதன்சந்தை பஸ் நிறுத்தம், புதுச்சத்திரம் பஸ் ஸ்டேண்டு, ஆண்டகளூர் கேட் அரசு கலைக்கல்லூரி அருகல் மற்றும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.

நாளை நவ. 1 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மோகனூர்-பரமத்திவேலூர் ரோட்டில் ஆதவன் பெட்ரோல் பங்க் அருகிலும், 4 ஆம் தேதி பகல் 1 மணிக்கு கொல்லிமலை ஒன்றியம் செங்கரை கிராமத்திலும், மாலை 4 மணிக்கு சேந்தமங்கலம் ஒன்றியம் பழைய பஸ்நிலையம் அருகிலும் முகாம்கள் நடைபெற உள்ளது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!