The DMDK pro teams review meeting of executives in Perambalur
தேமுதிக-வின், மாநில சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன் மற்றும் அந்தந்த அணி நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் கலந்துகொண்டு, பெரம்பலூர் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
பின்னர், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தவசி அன்பழகன், சிவா ஐயப்பன் மலர்மன்னன் பொன் சாமிதுரை மாவட்ட துணை செயலாளர் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.