The DMK candidate parivendar celebration of volunteers a chance to win!


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 18 தேதி தேர்தல் நடைபெற்றது.

பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட மொத்தம் 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில். அதிமுக வேட்பாளர் சிவபதி, ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், மாற்று வேட்பாளராக ஐஜேகே கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முத்துலட்சுமி, நாம் தமிழர் கட்சி வேட்பாள் சாந்தி, எழுச்சி தமிழர் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 19 போர் இறுதி போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கினர்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 13,91011 வாக்காளர்கள் வாக்களிக்க 1644 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூர் மக்களவை தொகுதியில்
வாக்குச் சாவடி மற்றும் தேர்தல் பணிகளில் 8046 பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் 370 துணை ராணுவப்படையினர், தமிழக போலீஸார் 1299 பேர் என மொத்தம் 1669 பேர் ஈடுபட்டனர்.

ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வீதம் 3288 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1644 கட்டுப்பாட்டு கருவிகளும், விவிபாட் கருவிகள் 1644 கருவிகளும் பயன்படுத்தப்பட்டது. பதட்டமான 71 வாக்குச்சாவடிகள் மற்றும் மிக பதட்டமானவை என அடையாளம் கண்டறியப்பட்ட 5 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 76 வாக்குச் சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், நுண் பார்வையாளர், வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட ஏற்பாடும் செய்யப்பட்டது. வாக்குப்பதிவு நாள் அன்று மொத்தம் 10 லட்சத்து 94 ஆயிரத்து 644 வாக்குகள் பதிவானது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பெரம்பலூரிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டது வந்தது இன்று அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது.

அதில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தற்போது வரை கணிமாக சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை கைப்பற்ற உள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஐஜேகே மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றியை ஆட்டம் ஆடி, பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!