The DMK government is acting as a government that has disappointed the people who voted for it: In Perambalur Tamaka State President GK Vasan Interview!

பெரம்பலூர் வந்திருந்த தமாகா மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் தெரிவித்தாவது:

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் எம்ஆர்எப் தொழிற்சாலையில் கழிவு நீர் கரும்புகை வெளியேறி பொது மக்களை அதிக அளவில் பாதிக்கிறது. உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது உரிமையாளரின் கடமை, ஆட்சியாளருடைய கடமை. மேலும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டியது முக்கியமான ஒன்று. இடங்களை கொடுத்தவர்கள் உள்ளூர் மக்கள் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

விளம்பரம்: 

எறையூர் சர்க்கரை ஆலை அருகில் நரிக்குறவர்கள் சுமார் 150 குடும்பங்கள் 46 ஆண்டுகளாக பயிர் செய்து வரும் நிலத்தில் நில பட்டா வழங்க வேண்டும் அரசு அதற்கு உண்டான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். ஏற்கனவே, நரிக்குறவர்கள் எஸ்சி எஸ்டி சமுதாயத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்திலே குரல் கொடுத்திருக்கிறோம், குளிர்கால கூட்ட தொடரிலே வலியுறுத்துவோம் என தெரிவிக்க விரும்புகிறேன்.

எம்ஆர்எப் தொழிற்சாலையில் வரும் கழிவு நீரை நிறுத்த வேண்டும் என்று நியாயம் கேட்க சென்ற 14 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது அவர்கள் சாமானியர்கள் கிராமத்து மக்கள் கிராமத்து மக்களுக்காக கிராமத்து மக்களுக்காக நியாயம் கேட்க சென்றவர்கள் அந்த வழக்குகளை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் அதுதான் நியாயம் என்றும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

பெரம்பலூர் டு மானாமதுரை சாலை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள், அதேபோல அருகாமையில் இருக்கின்ற அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தமாகா-விலிருந்து  அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிக்கும், ரயில் நிலையத்திற்கும் முறையான சாலை போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல ரயில்வே மேம்பால சாலையை  அணுகு சாலையை சீரமைக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டெல்டா பகுதியை பொருத்தவரையில செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து நெல் கொள்முதல் சென்டர் திறக்கப்படும் என்று தமிழக அரசால்  அறிவிக்கப்பட்ட  பல இடங்களில் செயல்படாமல் இருக்கிறது அதை செயல்படுத்த நினைவூட்ட விரும்புகிறேன். காவிரி  கொள்ளிட ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளம்பரம்:

சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம்  பொறுத்த வகையிலே வளர்ச்சி இன்னொரு விமான நிலையம் தேவை என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்தப் பகுதி மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலே அவர்களுக்கு ஈடு செய்யக்கூடிய சரியான முறையான நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும், அதற்கு மக்களின் குறைகேட்பு முறையாக அவர்களின் நூறு சதவீத குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த பிறகு அரசு இதுபோன்ற பணிகளை தொடங்கக்கூடிய நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் மருத்துவக் கல்லூரி அவசியம் அவசரம். ஒரு காலக்கெடுவுக்குள் இதனை அறிவிக்கும் என்று இந்த மாவட்ட மக்கள் அரசு மீது நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அதனை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

ஆன்லைன் சூதாட்டம் ஏன் இன்னும் தடை செய்யவில்லை என்பது கேள்விக்குறி  என்பதை விட ஒரு சந்தேகத்திற்கு இடம் கொடுத்துள்ளது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, பல கூட்டங்கள் நடத்தியும் இதற்கு ஏன் முடிவுக்கு வரவில்லை! ஏன் இந்த பிரச்சனையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்!  எதற்கு இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு கட்டவில்லை இதனால் பல தற்கொலைகள் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன அரசு இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும் இல்லை என்றால் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அரசாங்கமாக இந்த அரசு செயல்படுகிறது. எனவே, கொடுக்க வாக்குறுதிகளை அரசு முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய தொடர் தொடர் வேண்டுகோள், முக்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை என்ற குறை மக்களுக்கு இருக்கிறது அதன் அடிப்படையிலேயே ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு 17 – 18 மாதங்களிலே எதிர்மறை வாக்குகள் அதிகரித்துக் கொண்டு போகிறது என்பதிலே மாற்று கருத்து கிடையாது என்றும் தெரிவித்தார். அப்போது தமாக கட்சியினர் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!