The egg price is 10 paise decline in the price of an egg at 415 paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவடைந்நுது ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 415 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.
கூட்டத்தில் 425 பைசாவாக இருந்த முட்டையின் விலை 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 415 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்):
ஹைதராபாத் 398, விஜயவாடா 425, பர்வாலா 400, மும்பை 460, மைசூர் 435, பெங்களூர் 425, கொல்கத்தா 472, டெல்லி 435, ஹொஸ்பேட் 390, சென்னை 440.
கோழி விலை:
முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 67 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக பிசிசி அறிவித்துள்ளது