The elderly have their own life experiences to help young people today – the DRO speech

சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் முதியோர் தின விழா நடைபெற்றது.

இயற்கையின் விதிப்படி இப்பூமியில் பிறக்கின்ற அனைவரும் ஒருநாள் முதுமைப்பருவத்தை கடந்து செல்லவேண்டும் என்பது நியதியாகும்.

வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை கடந்து முதுமைப் பருவத்தில் வந்திருக்கின்ற நீங்கள் வாழ்க்கையில் பல்வேறு வகையான அனுபவங்களை பெற்றிருப்பீர்கள். எனவே எதிர்கால இந்தியாவின் தூண்களான இன்றைய இளைய சமுதாயத்திற்கு தங்கள் வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தர வேண்டும்.

மேலும், நமது தமிழக அரசு முதியோர்களை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை முதியோர்களுக்கு செயல்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக ஆதரவற்ற முதியோர்களின் வாழ்க்கையை பாதுகாத்திடும் பொருட்டு, முதியோர் உதவித் தொகையை வழங்கி வருகிறது.

இதுபோன்ற அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வகையான திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு, தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அமைத்துக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதியோர்கள் அனைவருக்கும் மருத்துவ பாpசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாலிகண்டபுரம் மைய தொழில்நுட்ப வல்லுநர் (மணையியல்) விஜயலெட்சுமி முதியோர்கள் மேற்கொள்ளவேண்டிய உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதியோர்களிடையே கதை சொல்லுதல், பாட்டுப்பாடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து முதியோர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) முத்துமீனாள், அரசு தலைமை மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் மரு. தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!