The election is TTV wave: Thanga.Tamilselvan
நடைபெற உள்ள தேர்தல்களில் டி.டி.வி., அலை வீசுகிறது என தங்க.தமிழ்ச்செல்வன் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெரம்பலூரில் அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளரும், தேனி நாடாளுமன்ற வேட்பாளருமான தங்க.தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் தனலட்சுமிசீனீவாசன் ஹோட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
தேனி எம்பி தொகுதியில் எனக்கு மிகபெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளும் கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். எங்க கட்சியை நசுக்க பார்க்கிறாங்க.
ஓ.பி.எஸ் டீம் பணத்தை அள்ளி இறைக்கிறார்கள், தெரு,தெருவாக பணத்தை போட்டி போட்டுக் கொண்டு, அள்ளித் தெளிக்கிறார்கள், அந்தளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. இதனை போலீசார் அதனை வேடிக்கை பார்க்கிறது. தேனி கலெக்டர் இதனை கண்டிச்சி நடவடிக்கையை சீர்செஞ்சா நன்றாக இருக்கும்.
செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர் போனது எங்க இயக்கத்திற்கு பெரிய இழப்பு இல்லை. தேனி தொகுதியில் எம்பி தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன். இந்த பகுதியில் 25 ஆண்டுகளாக பணி செஞ்சிருக்கேன். எனக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்.
பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்கமுடியாது. பணத்த கொடுத்தா யாரும் ஓட்டுபோடமாட்டங்க. மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம், அதிகாரம் வைச்சு வெற்றிப்பெற முடியாது. பாரதிய ஜனதா கட்சி, அதிமுக அரசிற்கு மக்களிடம் நல்லபெயர் இல்லை.
ஜாக்டோ- ஜியோ அமைப்பிற்கு 9 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டடது அமமுக மட்டுமே தான். எத்தனை ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ போராடுகிறார்கள்.
திமுக, அதிமுக இரண்டும் கட்சியும் ஏன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை.
எங்களுக்கு எம்பி தேர்தலில் நல்லமெஜாரிட்டி உள்ளது. தற்போது மிகப்பெரிய அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை அமமுக-விற்கு மக்கள் ஓட்டு போட்டு தருவார்கள்.
புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் பேசக்கூடாது என தடை போட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் பேசிவருகின்றனர். இது தேர்தல் விதிமீறல் . இதனால் முதல்வர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவிருக்கிறதா ?
100 சதவீதம் குக்கர் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும், குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம். இந்த தேர்தலில் டிடிவி அலை வீசுது என்றார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, பாடாலூர் வீரமுத்து உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.