The exhibit innovative science education Year of 2015 -16 at Perambalur Golden Gates school On July 14 Held.

2015-16ஆம் கல்வி ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் கண்காட்சி வரும் ஜுலை 14. ல் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் நடக்கிறது.

(file copy - கோப்பு படம்)

(file copy – கோப்பு படம்)

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி மேலும் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 2015-16ஆம் கல்வி ஆண்டிற்குரிய புத்தாக்க அறிவியல் கண்காட்சி பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் CBSE மெட்ரிக் பள்ளியில் 14.07.2016 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.
அன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் அளவியல் திறனை மேம்படுத்தும் விதமாக புத்தாக்க அறிவியல் கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்ச்சி தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகத்தால் வருடாந்தோறும் தொடர்ந்து அறிவியல் கண்காட்சியை நடத்தப்பட்டு வருகிறது. சென்ற கல்வி ஆண்டில் 127 பள்ளிகளிலிருந்து 136 காட்சி மாதிரி இயக்கி காண்பிக்கப்பட்டன. இதன் மூலம் பொதுமக்கள் பாராட்டுதலும் நன்மதிப்பும் பெறப்பட்டது.

அறிவியல் தொழிற்நுட்ப மாதிரி தயாரித்து காட்சிக்கு வைக்கப்படுவதற்காக, இக்கல்வி ஆண்டில் 121 மாணவ, மாணவியர்களுக்கு சென்னை அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் மூலம் நேரடி பயன்பாட்டின் கீழ் வங்கி வழியாக தலா ரூ.5000- அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாணவ,மாணவிகளால் காட்சிக்கு வைக்கப்பட உள்ள காட்சி மாதிரிகளை கண்டு அவர்களின் படைபாற்றல் திறனை ஊக்கப்படுத்த வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!