The famous actor and director, Crazy Mohan passed away
நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், இன்று மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘இந்தியன்’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களில் வசனங்கள் எழுதிய கிரேஸி மோகன், பல்வேறு மேடை நாடகங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார்.
அவருக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.