The farmers in Perambalur insisted on the road demanding to meet demands.
பெரம்பலூர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் அறிவித்ததையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற மறியலுக்கு மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், பொருளாளர் எ.அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, மாதர்சங்கம் எ.கலையரசி, வி.தொ.ச. மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், ஆகியோர் விளக்கவு உரையாற்றினர்.
சிபிஎம் வட்டசெயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், சிஐடியு எஸ்.அகஸ்டின், குன்னம் எஸ்.ஆறுமுகம், வேப்பந்தட்டை கே.காசிராஜன் உள்பட ஏராளமானோர் மறியலில் கலந்து கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் தனியர் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். மாலை விடுதலை செய்வார்கள்.