The father who protested against love marriage in Perambalur died mysteriously! Police interrogating mother and son!!
பெரம்பலூர், பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ராமகிருஷ்ணன் (45), சினிமா தியேட்டர் ஆபரேட்டர். இவரது மனைவி மலர்க்கொடி. மகன் வெங்கடேஷ் (24). ராமக்கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்தனர்.
இவர்களது மகன் வெங்கடேஷ் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இதனால், தந்தை மகனுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ள நிலையில்,
நேற்று தன் அம்மாவை பார்க்க வெங்கடேஷ் வந்துள்ளார். அப்போது, அங்கு, குடிபோதையில் இருந்த ராமகிருஷ்ணன் மகன் வெங்கடேசனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது குடியிருக்க வீட்டை எழுதி கொடுக்க கேட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் குச்சி மற்றும் கம்பிகளால் தாக்கிக் கொண்டனர். மலர்க்கொடியும், மகனுடன் சேர்ந்து கணவனை தாக்கியதாக கூறப்படுகிறது, வெங்கடேசனுக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு 8 தையல் போடப்பட்டது.
இன்று காலை ராமகிருஷ்ணன் தாயார் நீலம்மாள் வந்து பார்த்த போது, ராமகிருஷ்ணன் இறந்து கிடப்பது தெரிய வந்தது, இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.