பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் கட்சி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் இக்கட்சியின் மாநிலத்தலைவர்
ராமராஜன் தெரிவித்தாவது :
விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி உயிர் நீத்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்களுக்கு மணி மண்டபம் கட்டிடவும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் 40 குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திட உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்,
தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வறட்சி மாவட்டமான
பெரம்பலூர் மாவட்டத்தில் 33.7 கோடியில் விசுவகுடி அணை கட்டப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.
மேலும் பெரம்பலூர் அருகே 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொட்டரை நீர்த்தேக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி நீர் ஆதாராத்திட்டங்களை
செல்படுத்தியுள்ளது. பெரும் வரவேற்புக்குறியது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியாக கூடிய விலை கிடத்திடவும், அரசே நேரடியாக கொள்முதல் செய்திடவும், உரம் விலை உயர்வை கட்டுப்படுத்துவதோடு, உர மானியம் வழங்கிட வேண்டும். வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
போதிய நிதி ஒதுக்கீடு செய்து தமிழக நதிகளை மத்திய அரசு இனைத்திட வேண்டும் என்றார். மேற்கண்ட கோரிக்கைகள் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.