The flag day collection for the soldiers – started by the Collector of Perambalur.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொடி நாளை முன்னிட்டு உண்டியலில் நிதி அளித்து கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தொடங்கி வைத்தார்.

நமது நாட்டின் எல்லைகளை இரவு பகலாக பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7 ஆம் நாள் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

கொடி நாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

கொடி நாளையொட்டி இன்று (07.12.2017) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் ஆட்சியர் வே.சாந்தா முன்னாள் படைவீரர் நல அலுவலக பணியாளர்களிடம் உண்டியலில் நிதி அளித்து கொடி நாள் வசூலை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் படைவீரர்களின் நலனுக்காக கொடிநாள் நிதி வசூல் செய்யப்பட உள்ளது.

கடந்த (2016) ஆண்டு கொடி நாள் வசூலாக ரூ.9,58,100- நிர்ணயிக்கப்பட்டு, அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு ரூ.12,50,000- நிதி வசூலிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கொடி நாள் வசூலாக ரூ.10,53,900- நிர;ணயிக்கப்பட்டுள்ளது. எனவே நமது படைவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தினை போற்றிடும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னாவலர்கள் கொடி நாள் வசூலில் பெரும் அளவில் தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமாய் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, ராணுவ பணி ஊக்க மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி, வங்கிக்கடன் வட்டி மானியம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 5 நபர்களுக்கு ரூ.82,165- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வுப்பெற்ற லெ. கர்னல் ப.சதானந்தம், நலஅமைப்பாளர் சடையன், முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை தலைவர் பெரியசாமி உள்ளிட்ட அரசுஆலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!