The former Chief Minister J. Jayalalithaa’s plea to the 72nd Birthday celebration, Welfare Aid to 1000 People and Public Meeting, ; Perambalur City Secretary R. Rajaboobathi inform

பெரம்பலூர் அஇஅதிமுக நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி விடுத்துள்ள அறிக்கை:

பெரம்பலூர் நகர அஇஅதிமுக சார்பில் நாளை மாலை 6 மணியளவில், மேற்கு வானொலி திடலில், முன்னாள் முதலமைச்சரும், கழக பொதுச்செயலாளருமான அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை எளியவர்கள் ஆயிரம் பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை விளக்கியும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட செயலாளருமான தாமரை எஸ்.இராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் , மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் எம்.எல்.ஏவுமான ஆர். தமிழ்ச்செல்வன், தலைமை கழக பேச்சாளர் க.அறிவானந்தம், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அ.அருணாசலம், மாநில மீனவரணி இணைச்செயலாளர் பி.தேவராஜன், முன்னாள் எம்.பிக்கள் மா.சந்திரகாசி, ஆர்.பி மருதைராஜா மாவட்ட பொருளாளர் பூவை.தா.செழியன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், இணைச் செயலாளர் ஆர். பிச்சைமுத்து, உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் நெய்க்குப்பை ஆர்.துரை ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), வேப்பூர் கிருஷ்ணசாமி, செந்துறை சுரேஷ் மற்றும் பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள், பெரும் திரளாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர். நகர மாணவரணி செயலாளர் என்.இராஜா, வரவேற்பு நிகழ்த்த உள்ளளர். அதுசமயம், பெரம்பலூர் நகர வார்டு செயலாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். முன்னதாக காலை நேரத்தில் பெரம்பலூரில் உள்ள 21 வார்டுகளிலும், அம்மாவின் திருவுருவப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியும், கழக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!