The ganja smuggling gang was caught on the information given by the car owner to catch the stolen car in Kerala!
கேரளா மாநிலம் தலப்பள்ளி அருகே உளள் பெருகண்டூரை சேர்ந்தவர் உஸ்மான் மகன் அஸ்கர் (32), இவருடைய கார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணமல் போனது. இது குறித்து போலீசில் புகார் கொடுத்த நிலையில் நேற்று காரில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி காரின் போக்கு குறித்து தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மங்களமேடு போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், மங்களமேடு போலீசார் ஹைவே பாட்ரோல் வாகனத்தின் உதவியுடன் சம்பந்தப்பட்ட காரை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது காரில் வந்த 6 பேரில் 3 பேர் பிடிப்பட்டனர். மற்ற 3 பேர் தப்பி ஓடினர்.
காருக்குள் பார்த்த போது சுமார் 140 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடியவர்ளை தேடினர்.
அப்போது காரில் வந்த 6 பேர் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் பாலா, தெய்வம் மகன் அஜித் (27) அவரது அண்ணன் மதன் (29), ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கம்பத்தை சேர்ந்த கோபால் மகன் மனோஜ் (26), ஜெயம் முருகன் மகன் பிரபு @ வெள்ளையன் @ பிரதீபன் (27) ஆகிய இருவரையும் பிடித்தனர். மேலும், கஞ்சா 140 கிலோவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஒருவனையும் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கடத்தல் சம்பவம் தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தில் உள்ளதையும், கார் ஓனர் ஜி.பி.எஸ். கருவி மூலம் தெரிவிக்காவிட்டால் இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரியாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ. 14 லட்சம் என கூறப்படுகிறது.