The girl who suffered mental health was recovered and the Perambalur court handed it over to her parents.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், கடந்த ஏப்.18 அன்று சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வேலா கருணை இல்லத்தில், சேர்க்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் மீட்டு காவல் துறை, நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று பராமரித்து வந்தனர். அந்த பெண் சிகச்சையால் குணமடைந்தார். அவர், பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூரை சேர்ந்த
இந்நிலையில் கடந்த அக்10. அன்று பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு மூலம் உலக மனநல தின விழா மேற்படி மறுவாழ்வு இல்லத்தில் நடைபெற்றது. அப்பொழுது பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.பாலராஜமாணிக்கத்திடம், சரஸ்வதி தான் தற்சமயம் உடல்நலம் சரியாகி விட்டதாகவும் தன்னை, பெற்றோரிடம் சேர்த்து வைக்க கோரிக்கை விடுத்தார்.
அதன் பேரில் சரஸ்வதி, வேலா கருணை இல்ல நிர்வாகி மற்றும் சரஸ்வதியின் பெற்றோர்களை பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழு முன் நேரில் ஆஜராக உத்தரவிட்டதின் பேரில் இன்று ஆஜராகினார்கள். அவர்களிடம் பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி வினோதா, பெரம்பலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட் அசோசியேசன் சங்க தலைவர் முகமது இலியாஸ், சட்டபணிகள் ஆணைகுழுவின் விசாரணை மைய வழக்கறிஞர் ரத்தினவேல், நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் அறிவுரை வழங்கினர்.
அதன் பேரில், பரமசிவம் தனது மகள் சரஸ்வதியை, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். பாலராஜமாணிக்கம் மற்றும் சார்பு நீதிபதிகள் திருமதி.ஸ்ரீரிஜா, வினோதா ஆகியோர் முன்னிலையில் தான் தனது மகளை நல்லபடியாக பார்த்து கொள்வதாக உறுதி அளித்து தன்னுடன் அழைத்து சென்றார். இதனை பொது மக்களும் வழக்கறிஞர்களும் பெரிதும் பாராட்டினர். வேலா கருணை இல்ல நிர்வாகி அருண்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.