The gold coin was awarded to the driver for 20 years without accident.
திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர; உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 282 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், 20 ஆண்டு காலமாக எந்தவித விபத்துமின்றி சிறப்பான முறையில் வருவாய்த் துறையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் விஜயகுமாரை பாராட்டி தமிழக அரசால் வழங்கப்பட்ட 4 கிராம் தங்க நாணயத்தை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.