The Government Doctors roadblock infrontof perambalur bus stand || பெரம்பலூரில் அரசு மருத்துவர்கள் சாலைமறியல்

அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். இல்லையெனில், ஆந்திர மாநிலத்தில் இருப்பது போல் அனைத்து இடங்களையும் மாநில அரசு நிரப்பிக்கொள்ளும் வகையில் மாநில அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 18ம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் புற நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெரம்பலூர் அரசு மருத்துவர்கள் புதிய பேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர்.

மறியலில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மாணவர், மாணவிகள் என 28 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!