The Government’s plan to start with Hogenakkal hydropower Pazha. Nedumaran request
தஞ்சாவூர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பிறந்த நாள் விழா முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒக்கனேக்கல் புனல் மின் திட்டத்திற்கு 1948-ல் திட்டமிட்டு 1960-ல் காமராசர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதம் கர்நாடகத்திற்கு தர தமிழகம் தர சம்மதம் தெரிவித்தும் கர்நாடகா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. பின் 1980-ல் அப்போதைய கர்நாடகா முதல்வர் குண்டு ராவ் புத்தாண்டு பரிசாக கர்நாடகா மக்களுக்கு மேகதா துவில் அணை கட்டப்படும் என அறிவித்தார் சட் Lமன்றத்தில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதகம் குறித்து கூறியவுடன் அனைத்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தனர். இதுகுறித்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடமும் கூறினோம். இந்நிலையில் மேகதா துவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் கருத்து கேட்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது தமிழக அரசு உடனடியாக ஒக்கனேக்கல் புனல் மின் திட்டத்தை உடனடியாக துவங்கவேண்டும் என்றார், உடன் ஊடகவியலாளர் அய்யநாதன் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாவரம் முருகேசன் துரை, குபேந்திரன் உடனிருந்தனர்.