The Grama sabha Meeting in all the villages in Namakkal district on Jan. 26th : Collector Notify
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களிலும் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல். திட்ட அறிக்கை. குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். பஞ்சாயத்துப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல். மக்கள் திட்டமிடல் இயக்கம் . முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.