பெரம்பலூர் தொழிலாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு,தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்ற முதல் 10 மாணவர்களுக்கும் என கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண்- 718, தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் அக். 31-க்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-24321542 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.