ப்ளூவேல் (நீலத்திமிங்கலம் ) விளையாட்டு தொடர்பான இணையதளத்தை மத்திய அரசு முடக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இந்தியா முழுதும் ப்ளூவேல் விளையாட்டினால் பலர் உயிரிழந்துள்ளனர். இதில் மதுரையில் விக்னேஷ் என்ற கல்லுாரி மாணவர் உயிரிழந்தார். மேலும் பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ப்ளூவேல் விளையாட்டு தொடர்பான இணையதளத்தை மத்திய அரசு முடக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவ் விஷயத்தில் இந்திய அரசு, ரஷ்ய தூதரகத்துடன் பேசி ப்ளூவேல் தொடர்பான அனைத்து இணையதளங்களையும் முடக்க உத்தரவிட வேண்டும் ப்ளுவேல் விளையாட்டு தொடர்புகளை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க, சைபர் கிரைமில் இருந்த அதிகாரி முருகன் கண்காணிப்பில் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிடத்துள்ளது.
மேலும் ப்ளூவேல் விளையாட்டின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த டிஜிபி, பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறை செயலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.