The husband committed suicide in his wife’s Leave near Namakkal
நாமக்கல்மனைவியை பிரிந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
நாமக்கல் எஸ்கே நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் (32). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளக்கு முன் புதுச்சேரியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக ரம்யா, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அய்யனார், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.