The impact of the increase of district heat in many places exceeded 101 degrees in the summer


பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் பாடாலூர், எசனை, வாலிகண்டபுரம், அரும்பாவூர் மேட்டூர், பூலாம்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாத நிலையில் வறட்சியும் தலைவிரித்து ஆடுகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வெயிலின் உக்கிரமும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக 101 டிகிரியும் குறைந்தளவாக 74 டிகிரி பாரான்ஹீட் வரை வெயில் பதிவாகி உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் கொடுமை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!