The information given by the Tamil Nadu Tourism Development Corporation in the media is untrue; SRM Hotel Description!

எஸ்.ஆர்.எம் ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் இன்று விடுத்து அறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

1996ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் நிறுவனம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, இன்று வரை எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பாக, வாடகைத் தொகையை முழுமையாக செலுத்தியுள்ளது.

3 வருடங்களுக்கு ஒரு முறை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உயர்வு தொகையும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடாத அதிக தொகையை செலுத்த, சுற்றுலா வளர்ச்சி கழகம் வற்புறுத்திய தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2017 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே சமயம் 2003-ம் ஆண்டு முதல் வரி தொகையை கணக்கிட்டு SRM Hotel செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான பாக்கித் தொகை நிலுவையில் இருப்பதாகக் கூறி 12 கோடி ரூபாய் செலுத்துமாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கடந்த 4ஆம் தேதி கடிதம் (04.06.2024), எஸ்.ஆர்.எம் ஹோட்டலுக்கு கடிதம் அனுப்பியது.

இது எந்த ஒப்பந்தத்திலும் குறிப்பிடாத ஒன்றாகும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஊடகங்களில் அளித்து வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது.

குத்தகை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவது சரியானது அல்ல எனவும், எஸ்.ஆர்.எம் ஹோட்டல் சார்பாக தெரிவிக்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!