The jewelery flush with his wife in Namakkal
நாமக்கல்லில் போலீசார் மனைவியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் போலீசார் பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரது மனைவி சாந்தி (32). இவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பின்புறத்தில் உள்ள போலீசார் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். சாந்தி சம்பவத்தன்று காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் பஸ்ஸ்டாண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து டூவீலரில் வந்த மர்ம நபர் நாமக்கல்-திருச்செங்கோடு ரோடு வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது சாந்தி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார்.இச்சம்பவம்குறித்து சாந்தி நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சாந்தியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.