பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் அனைத்து வகை விளையாட்டுகளும் கற்று தரப்படுவதுடன், பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது ஏற்படும் காயத்திற்கு செய்ய வேண்டிய முதலுதவி உபகரணங்கள், மற்றும் களைப்பு, அல்லது மயக்கமடையும் வீரர்களுக்கு அளிக் புத்துணர்வு பானங்கள் போன்றவை இல்லாமல் இருப்பதால் மைதானத்திற்கு வரும் வீரர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், கடையில் சென்று வாங்கி கொள்ளலாம் என்றால் ஒரு கி.மீ தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய நிலைமைய உள்ளதால் வெளியூரில் இருந்து வரும் வீரர்கள் கடும் அவதிபடுவதுடன் விளையாட்டில் போதிய ஆர்வம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தும் போது முதலுதவி உபகரணங்கள் மற்றும் புத்துணர்வு பானங்களை வழங்க வேண்டும் என்பது விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.