![](https://i0.wp.com/www.kaalaimalar.com/wp-content/uploads/2018/03/Cow-on-the-road-and-plowed-into-the-car-caught-fire-on-the-east-coast.jpg?resize=448%2C294&ssl=1)
The lawyer who set fire to the car and arrested two men near Namakkal
நாமக்கல் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரை எரித்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சின்ன களங்காணியைச் சேர்ந்தவர் லோகேஷ், வழக்கறிஞர் . இவர், புதுக்கோம்பை ஸ்ரீஒட்டையடி பெரியசாமி கோவில் பூசாரியாக உள்ள அண்ணாதுரை என்பவரின் வழக்கு ஒன்றை நடத்தி வருகிறார். பூசாரியின் எதிர் மனுதாரரான பரமசிவம் வக்கீல் லோகேஷை சந்தித்து பூசாரிக்கு ஆதரவாக வாதாடக் கூடாது என மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த வக்கீல் லோகேஷின் காருக்கு பரமசிவமும், அவருடன் வந்த இருவரும் தீவைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் செல்லத்துரை, மூர்த்தி என்ற இருவரையும் கைது செய்து பரமசிவத்தைத் தேடி வருகின்றனர்