The Legal Aid Camp for the National Rural Employment Guarantee Scheme was held at Perambalur.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்களுக்காண சட்ட உதவி முகாம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி (பொறுப்பு) என்.விஜயகாந்த் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இம்முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் செயலர் மற்றும் சார்பு நீதிபதி எம்.வினொதா தலைமைவகித்து பேசியதாவது:

வரதட்சணை கொடுப்பதும் கேட்பதும் குற்றம், எனவே, பொதுமக்கள் இதுகுறித்து மிக்க விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம், குழந்தை திருமண தடைச்சட்டம், கட்டாயக் கல்விச்சட்டம் மற்றும் அழப்படை சட்டங்களின் சாரம்சங்களையும் எடுத்துரைத்தார். பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளும் பெண்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள அறிமுகம் இல்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்த்துக் கொள்வது அவசியம் என்றும்,
குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் குற்றம் என்றும், அவ்வாறு தெரியவந்தால் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மூலம் தக்க நடவழக்கை எடுக்கப்படும் என்றும்,
பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் நபர்களுக்கு சட்ட பணிகள் ஆணைக்குழு உறுதுணையாக இருக்கும் என்றும்,

வழக்காடிகள் தங்கள் வழக்கை நடத்த போதிய பண வசதி இல்லையெ என்று வருத்தப்பட தேவையில்லை என்றும் அதற்கு சட்ட பணிகள் ஆணைக்குபு மூலம் இலவசமாக வழக்கை நடத்திதர வர்க்கறிஞர்கள் நியமனம் செய்து தரப்படும் என்றும்,

பாலியல் வன்கொடுமை மற்றும் அமில வீச்சினால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட பணிகள் ஆணைக்குழு மூலம் தக்க நடவடிக்கை எடுக்கும், பொதுமக்கள் தயங்காது தங்கள் அனைத்துப் பிரச்சனைகளையும், சட்ட பணிகள் ஆணைக்குழு நேரில் அணுகி தீர்த்துக் கொள்ளலாம் என்றும்,

மேலும், உலக அளவில் மனித கடத்தல் சம்பந்தமாக குற்றங்கள் நிறைய நடந்து வருகிறது. மனித அபயங்களை திருடி வியாபார ரீதியாக மருத்துவமணைகளுக்கு சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்தாலும் பொதுமக்கள் சட்ட பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என்றும் தெரிவித்தார்.

இம்முகாமில் சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி சமூக சட்ட ஆர்வலர்கள் சரவணன், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்..


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!